மத்திய அமைச்சரவையில் விவேகமிக்க அனுபவசாலிகளுக்கும், வேகமிக்க இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் விரிவுபடுத்தப்பட்ட மத்திய அமைச்சரவையில் பலருக்கும் புதிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.பழைய அமைச்சர்களில் மூத்த அமைச்சர்கள் சிலர் தவிர்த்து, பிறரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவையில் பிரதமர் நீங்கலாக 30 கேபினட் அமைச்சர்கள், 2 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 45 இணை அமைச்சர்கள் என மொத்தம் 77 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் 61 முதல் 70 வயது கொண்ட 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்களில் 51 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 16 பேர்.
புதிய அமைச்சரவையில் 41 முதல் 50 வயது வரையிலானவர்கள் 10 பேர். மேலும் அமைச்சரவை பட்டியலில் இளைஞர்கள் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, 31 முதல் 40 வயதுக்குட்பட்ட அனுப்பிரியா சிங் படேல், சாந்தனு தாகூர், நிதிஷ் பிரமானிக் ஆகிய 3 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.







