கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா?
அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை.
2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ்-ன் தவறு”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







