சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பாலசந்தர் தனது பி.எஸ்.ஓ. பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளார். அங்கு பாலசந்தர் நின்று பேசிக்கொண்டிருந்த போது பி.எஸ்.ஓ. பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீஸார், பாலசந்தரின் உடலை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலர் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் புதன்கிழமை உத்தரவிட்டார்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ரெளடி தர்கா மோகனின் மகன்கள் பிரதீப், சஞ்சய் ஆகியோர் கூட்டாளி கலைவாணனுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக பாலசந்தரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்கள் மூவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடியில் பதுங்கியிருந்த பிரதீப். சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகிய 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.