3வது டி20 : இந்தியா, தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.  இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி முதலாவது…

இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

ந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி முதலாவது டி20 போட்டி நடைபெற இருந்த நிலையில், இடைவிடாது பெய்த கனமழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்ற 2வது டி20 போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்க்கில் இன்று 3வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிப்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.

இதையும் படியுங்கள் : நாடாளுமன்றத்திற்குள் புகை குப்பிகளை வீசிய 5 பேர் கைது! – காவல்துறை தீவிர விசாரணை…

அதேபோல் முன்னிலை வகிக்கும் தென்னாப்பிரிக்காவும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற கடுமையாக போராடும். மேலும் 2 டி20 போட்டிகளிலுமே மழை குறுக்கிட்டதால், இரண்டு அணி வீரர்களுக்கும் ஆட்டம் சற்று சவாலாகவே அமைந்திருந்தது. இன்றைய போட்டியிலும் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என்றும், எனவே இந்திய அணி தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.