கடந்த 3 நாட்களில் சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் 498 சர்வதேச விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பிஃஎப்-7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனை முறை நடத்தப்பட்டுள்ளது.







