சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 155 பேராக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி பள்ளி அருகே உயர் கல்வித்துறை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மாணவர்கள் தங்கி நீட் தேர்விற்கு படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், ஊருக்கு சென்று திரும்பிய மாணவருக்கு தொற்று ஏற்பட்டு, அவர் மூலமாக மற்றவர்களுக்கும் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்று பாதித்த 32 பேரும் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா மையத்துக்கு சென்று மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.