செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதில் வேதஸ்ரீ என்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை செங்குன்றத்தை பகுதியைச் சேர்ந்த சதீஷ் அவரது சகோதரர் குமரேசன் மற்றும் அவர்களது நண்பர் சீனுவாசன் ஆகியோர் குடும்பத்தோடு மேல்மலையனூர் அம்மன் கோவிலுக்கு இறை வழிபாடு செய்வதற்காக நேற்று இரவு சென்றுவிட்டு இறைவழிபாடு செய்த பின் இன்று காலை சென்னை திரும்பும் போது சதீஷ் என்பவரது மகள் வேதஶ்ரீ (11) மற்றும் குமரேசன் மகள் சிவசங்கரி (15) ஆகியோர் செங்கல்பட்டு மாமண்டூர் பாலாற்றில் குளிப்பதற்கு இறங்கியுள்ளனர்.
முதலில் வேதஶ்ரீ ஆற்றில் இறங்கிய குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து சிவசங்கரியும் தாழ்வான பகுதியில் குளிக்கவே அவரும் தண்ணீரில் மூழ்கினார் இருவரும் நீரில் மூழ்கியதை அறிந்த சீனுவாசன் அவர்களை காப்பாற்ற அவரும் ஆற்றில் இறங்கியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மூவருமே நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
தகவல் அறந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தற்போது வேதஶ்ரீ சடலத்தை மட்டும் மீட்டுள்ளனர். மேலும் இருவரின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாலாற்றில் குளிக்க வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் இது போன்ற பலர் ஆபத்தை உணராமல் குளிக்க செல்கின்றன. இதனால் தொடர்ந்து பாழாற்றில் குளிக்க செல்லும் நபர்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் இந்த ஆபத்தை உணர்ந்து அங்கு குளிக்க செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பிலும் செங்கல்பட்டு காவல்துறையை மற்றும் தீயணைப்பு துறைவினர்கள் சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







