ஜம்மு-காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை மிதமான நில அதிர்வு உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 11.33 மணியளவில் 3.9 ரிக்டர்…

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை மிதமான நில அதிர்வு உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 11.33 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.  இது 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலஅதிர்வால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே,  லடாக்கில் நேற்று இரவும் 10.15 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.  இது மையப்புள்ளி 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.