முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? எய்ம்ஸ் இயக்குனர் பதில்!

குழந்தைகள் மத்தியில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலோரியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 63 நாட்களுக்குப் பிறகு 1 லட்சத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், 2,123 உயிரிழந்தனர். இதேபோல தமிழகத்திலும் பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், “கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. கடந்த வாரத்தை விட 33 சதவிகிதம் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போது 13.03 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலோரியா, “கொரோனா இரண்டாவது அலை தான் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், 2வது அலையில் குழந்தைகள் மத்தியில் சிறிய அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தியது. வரும் காலத்திலும் குழந்தைகள் மத்தியில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தாது” என்று கூறினார்.

சுகாதாரத் துறைக்கான நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், “19 கோடி கோவாக்சின் தடுப்பூசியும், 25 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியும் கூடுதலாக ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து தடுப்பூசிகளை பெற அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. தனியார் மருத்துமனைகள் வாங்கும் தடுப்பூசிகளின் விலையை தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும்” என்று கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா நிவாரணத் தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

Saravana Kumar

சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்!

எல்.ரேணுகாதேவி

“வெள்ளை அறிக்கைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை”; அமைச்சர் சுப்பிரமணியன்

Halley karthi