2வது டி20 போட்டி: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது போட்டி, டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியில் நடக்கின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது..

இந்த நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), குல்படின் நைப், செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி அல்லது நவீன் உல்-ஹக்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.