இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்தது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 249 ரன்களுக்கு 240 ரன்கள் எடுத்து போராடி தோல்வியை சந்தித்து.
இதையடுத்து 2வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் விவரம் வருமாறு, இந்திய அணியில், ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணியில், ஜேன்மன் மலான், குயின்டான் டி காக், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ் (கேப்டன்), பிஜொர்ன் ப்ராஜூன், ரபாடா, அண்ட்ரிஜ் நோர்ட்ச் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.







