நேபாளத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவு

நேபாளத்தில் உள்ள மனாஸ்லு மலையில் இன்று மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நேபாளத்தில் மனாஸ்லு மலைப்பகுதி உள்ளது. இங்கு அதிகப்பட்சமான பனிப்பொழிவு ஏற்படும். இந்நிலையில், இங்கு சமீபத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய…

நேபாளத்தில் உள்ள மனாஸ்லு மலையில் இன்று மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்தில் மனாஸ்லு மலைப்பகுதி உள்ளது. இங்கு அதிகப்பட்சமான பனிப்பொழிவு ஏற்படும். இந்நிலையில், இங்கு சமீபத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் மனாஸ்லு பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆக்ரோஷமாக வந்த பனிபுகை அந்த இடத்தையே சூழ்ந்து கொண்டது. இதனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த மலையேறும் வீரர்களின் கூடாரங்கள் பனியில் மூழ்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள பனிச்சரிவு என அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த முறை ஏற்பட்ட பனிச்சரிவின்போது, 2 மலையேற்ற வீரர்கள் அதில் சிக்கி உயிரிழந்தனர். தற்போது இரண்டாவது முறையாக பனிச்சரிவு ஏற்பட்டபோது, ராணுவ வீரர்கள் அதை பார்த்து தப்பித்து ஓடும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.