விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறோம் என மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்தார்.
நடிகர் விஜயின், விஜய் மக்கள் இயக்கம் அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூர் சீஷோர் 8 வது அவன்யூவில் அமைந்துள்ளது. இன்று மாநில மற்றும் மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தில் புதியவளைத்தள ஐ.டி கள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய அடையாள அட்டை மற்றும் ஐ.டி பிரிவு சமுக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட ஐ.டிகள் தனித்தனியாக விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டத்திலிருந்தும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புஸ்சி ஆனந்த், “விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு முகநூல், டிவிட்டர், யூடியூப் சேனல் மற்றும் குறுதியகம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்டம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் துவங்கப்பட்ட குருதியும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
பின் தொடர்ந்து பேசிய அவர், “ இந்த குறுதியாகம் சார்பில் தினமும் 50 முதல் 55 நபர்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பல்வேறு ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். சமூக வலைதள பக்கங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றும்,மக்களிடத்தில் ஆதரவு நன்றாக உள்ளது என்றும்,மக்களிடத்தில் அனைத்தையும் சொல்வதற்கு இது சிறப்பாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.







