#Nigeria -வில் சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரியாவில் சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், 281 கைதிகள் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக நைஜீரியாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மைடுகுரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்,…

281 inmates escape after prison wall collapses in #Nigeria!

நைஜீரியாவில் சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், 281 கைதிகள் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நைஜீரியாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மைடுகுரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மைடுகுரி நகரில் உள்ள சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதையும் படியுங்கள் : UPI பரிவர்த்தனை: நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதி! என்னென்ன தெரியுமா?

சுவர் இடிந்ததையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 281 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, தலைமறைவான கைதிகளை தேடும் பணிகளை காவல்துறையினர் முடுக்கிவிட்டனர். இதையடுத்து, தப்பிச்சென்ற 7 கைதிகள் மட்டும் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.