நானியின் ‘#SuriyavinSanikizhamai’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு!!

‘சூர்யாவின் சனிக்கிழமை’ ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய திரைப்படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’,…

film team released poster 'Surya's Saturday' has collected Rs.100 crores.

‘சூர்யாவின் சனிக்கிழமை’ ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய திரைப்படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத்தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகியது. இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!

டிவிவி நிறுவனம் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியது. இந்நிலையில், ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. வசூலில் சதம் அடித்ததையடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நானி, ‘கோர்ட்’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய 2 திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் ‘ஹிட் 3’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.