பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்றைய தினம் முதல் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் எந்தவித சிரமுமின்றி வந்து சேர்வதற்கு ஏதுவாக இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட கடந்த 13-ஆம் தேதி, லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்தும், பிற ஊர்களில் இருந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பமாக புறப்பட்டு சென்றனர். அவர்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் கூட்ட நெரிசல் இன்றி சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டனர். அவ்வாறு சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்புவதற்கான சிறப்பு பேருந்துகளின் இயக்கமானது நேற்று முன்தினம் தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து நேற்று காணும் பொங்கலை முடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளனர்.காணும் பொங்கல் முடிந்து வருவோரின் வசதிக்காக நேற்றைய தினம் 3500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தொடர்ந்து ஊர்களில் இருந்து வருபவர்களின் வசதிக்காக இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.