கேரளாவில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்திய புலியை வனத்துறையினர் துப்பாக்கியினால் சுட்டு பிடித்தனர். மயக்கிய நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் சென்ற புலியை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கேரளா மாநிலம் மானந்தவாடி என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று நடமாடி அந்த பகுதியில் உள்ள கால்நடைகளை கடித்து கொல்வதும், விவசாயி ஒருவர் மீது பாய்ந்து அவரை கடித்து தாக்கியும் இருந்து வந்தது. இந்த புலியினை பிடிக்க இந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் புலி வெள்ளரம்குண்று என்ற பகுதியில் உள்ள வாழை தோப்பில் நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் புலியை பிடிக்க முயன்ற போது புலி வனத்துறையினரை தாக்க முயன்றது. இதில் தப்பிய வனத்துறையினர் மயக்க ஊசி கொண்ட துப்பாக்கியினால் புலியை இரண்டு முறை சுட்டனர். குண்டடி பட்ட புலி அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரம் மயக்கதுடனே தப்பி சென்ற நிலையில் ஒரு கட்டத்தில்
மயக்கமடைந்து கீழே விழுந்தது.
இதனையடுத்து அந்த புலியை பிடித்து பாட்டேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. பொதுமக்களை தொடந்து அச்சுறுத்தி வந்த புலி பிடிபட்டதால் இந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு
விடுகின்றனர்.







