எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!

தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள்…

தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், நாகை, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 25 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள் : சுக்தேவ் சிங் கொலை வழக்கு – 3 குற்றவாளிகளை கைது செய்தது டெல்லி காவல்துறை..!

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கைதான மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.