அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 21பேர் பனிமலையில் சிக்கி தவிப்பு..!!!

வட மாநிலங்களில் தொடரும் கன மழையால் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 21பேர் பனிமலையில் சிக்கியுள்ளனர். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு…

வட மாநிலங்களில் தொடரும் கன மழையால் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 21பேர் பனிமலையில் சிக்கியுள்ளனர்.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. கன மழையில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மணாலி, குலு, கின்னவுர் மற்றும் சம்பா ஆகிய இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ஜம்மூ காஷ்மீர் மநிலத்திலும் தொடர்ச்சியாக கன மழை மற்றும் பனிச் சரிவுகளால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுக்க பல இடங்களில் இருந்து அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர். கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனிமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டிலிருந்து அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பயணிகள் தமிழகம் வர முடியாமல் சிக்கியுள்ளனர்.  தமிழகம் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த நபர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர்  நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ வெளியிட்டு அமர்நாத் யாத்திரை பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீநகருக்கும் காஷ்மீருக்கும் இடையில் பனி நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டதால் மணி காம்ப் என்ற முகாம் இடத்தில் நான்கு நாட்களாக உணவு,  தண்ணீர் இல்லாமல் மாட்டி சிக்கி தவிப்பதாக அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் அந்த  வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.