தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும்…

தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதனிடையே, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயந்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.