2026-27 தமிழ்நாடு பட்ஜெட்: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

2026-27 தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026-27-ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், “

சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ் – திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம், சூப்பர் Safety, சூப்பர் Student மற்றும் சூப்பர் Campus உறுதிசெய்யப்படும். முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்காக 2026-27 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளி நிறைவுத் திட்டம் – தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக 2,514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3,734 பள்ளிகளில் 2,132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் – சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் இப்பள்ளிகளில், கல்வி, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும். இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளிப் பாடத்திட்டத்தை மறுசீரமைக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

பொது நூலகங்களை மறுவடிவமை – 38 மாவட்ட மைய நூலகங்களில் இணை-பணியிட வசதிகள் கொண்ட கற்றல் மற்றும் புத்தாக்க மையங்களாகச் செயல்படுத்தப்படும். பொது நூலகங்களை மறுவடிவமைப்பதற்கு இந்த அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

நவீன பிராண்டட் மிதிவண்டிகள் – 2026-27 ஆம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புப் பயிலும் சுமா 5.32 இலட்சம் Gen-Z / இளம் தலைமுறை மாணாக்கர்களுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டி வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.