“திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஆதாரம் குறைவாக உள்ளது!” – அமைச்சர் மரிய வில்சன்

புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாக உள்ளது என்ரு நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.

2026 – 27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், “நன்றி கடன் செலுத்த அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். மூன்று மாதங்களில் சொன்னதை செய்தவர் முதல்வர். தவெக அரசு குறுகிய காலத்தில் சாதனைகளை செய்துள்ளது. இந்த அரசு, பிறப்பால் அனைவருக்கும் சமம்,

மாநில மொத்த உள்நாடு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாயின் விகிதம், வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை என பல்வேறு நிதிநிலை குறியீடுகளில் மற்ற இணை மாநிலங்களுடம் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பின்தங்கிய நிலையில் உள்ளது; இதன் காரணமாக புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாக உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றி நிதி ஆதாரத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2036 ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார திட்டம் கொண்டு வர திட்டம் வைத்துள்ளோம்.

திட்டங்கள், டெண்டர்களை வெளிப்படைத்தன்மையாக கொண்டுள்ளது. நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்போம். உண்மையான சமூக நீதியை கடந்த மூன்று மாதங்களில் முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். தமிழகத்தில் தொடர்ந்த ஊழலை முதலமைச்சர்

மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசாவைக்கூட தொட மாட்டோம், தொட்டால் விட மாட்டோம், இதற்கு முன் தொட்டவர்களையும் விட மாட்டோம் என்பதில் உறுதியுடன் செயல்படும் நமது முதலமைச்சரின் பெயரைக் கேட்டாலே, ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்கி ஓடுவதை தினந்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.