நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 19.09.2026, மாலை 17:30 மணி அளவில் அப்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று 20.09.2026, காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 21 செப்டம்பர் அன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 23 செப்டம்பர் அன்று காலை வாக்கில் வடக்கு ஆந்திரப்பிரதேசம் தெற்கு ஒடிசா கடற்கரைக்கு அருகே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை சென்றடையக்கூடும்.

படிப்படியாக 22 செப்டம்பர் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் அதனுடன் கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முதல், தெற்கு உள்கர்நாடகா வரை மத்திய வங்ககடல் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் வழியாக கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, இன்று 20-09-2026: தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும்.
திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-09-2026: நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22-09-2026: மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

23-09-2026 மற்றும் 24-09-2026: மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

25-09-2026: மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (20-09-2026) மற்றும் நாளை (20-09-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தமிழக கடலோரப்பகுதிகள்:
21-09-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்வளைகுடாமற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40முதல் 50கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 60கிலோ மீட்டர்வேகத்திலும்வீசக்கூடும்.

22-09-2026மற்றும் 23-09-2026:தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடாமற்றும்
அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல்50 மீட்டர் கிலோ மீட்டர்வேகத்திலும்வீசக்கூடும்.

24-09-2026:வடதமிழககடலோரப்பகுதிகளில்சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு45 முதல்55 கிலோமீட்டர்வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர்வேகத்திலும் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல்பகுதிகள்:
20-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள், அந்தமான்கடலின் அநேகபகுதிகள், மத்தியகிழக்கு-தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான்கடலின் இதரபகுதிகள் மற்றும் இதர தென்கிழக்கு மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் -சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21-09-2026:மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்குவங்கக்கடல்பகுதிகள், தெற்குவங்கக்கடலின் சிலபகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு கிலோ 55 முதல் 45 கிலோ மீட்டர்வேகத்திலும் 65 மீட்டர்வேகத்திலும் இடையிடையே, அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் இதர தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 50 முதல் 40 .கிலோ மீட்டர்வேகத்திலும்வீசக்கூடும்

22-09-2026: மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், அநேகவங்கக்கடல்பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45முதல் 55 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதர வங்கக்கடல்கடல் பகுதிகள்,அந்தமான்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23-09-2026: வடக்கு ஆந்திர கடலோரபகுதிகள்மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில்சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,
இதர வங்கக்கடல் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு கிலோ 50 முதல் 40 கிலோ 60 மீட்டர்வேகத்திலும் இடையிடையேமீட்டர்வேகத்திலும் வீசக்கூடும்.

24-09-2026: வடக்கு ஆந்திர கடலோரபகுதிகள், மத்தியமேற்குவங்கக்கடலின்சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு கிலோ மீட்டர்வேகத்திலும் 60 முதல் 50 கிலோ மீட்டர்வேகத்திலும் 70 இடையிடையே, தெற்கு ஆந்திர கடலோரபகுதிகள் மற்றும் வங்கக்கடலின்அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 55 முதல் 45 கிலோ மீட்டர்வேகத்திலும், இதர வங்கக்கடல் கடல் பகுதிகள்மற்றும்அந்தமான்கடல்பகுதிகளில்சூறாவளிக்காற்று மணிக்கு கிலோ 60 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 50 முதல் 40 மீட்டர்வேகத்திலும்வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.