புதுக்கோட்டையில் அரசு மருத்துவர் வீட்டில் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதேபோன்று அதே பகுதியில் 4 வீடுகளில் இருசக்கர வாகனங்கள் 10 பவுன் நகை கொள்ளை…

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து
200 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதேபோன்று அதே பகுதியில் 4 வீடுகளில் இருசக்கர வாகனங்கள் 10 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் முக்கனாமலை பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் ஆஷிக் அசன் முகமது.

இவர் நேற்று நள்ளிரவு தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை
பூட்டிவிட்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் வீடு திரும்பும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். இதனைத் தொடர்ந்து வீட்டை சோதனை செய்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 200 பவுன் தங்க நகைகள்
கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் போலீசாருக்கு
தகவல் அளித்துள்ளார். இதேபோன்று அவரது வீட்டிற்கு அருகே உள்ள நான்கு
வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இரண்டு வீடுகளில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளது. மேலும் இரண்டு வீடுகளில் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து
வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு உள்ளது.

ஒரே இரவில் இலுப்பூர் பகுதியில் அரசு மருத்துவர் வீட்டில் 200 பவுன் தங்க
நகைகள் மற்றும் அடுத்தடுத்த வீடுகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் 10 பவுன்
தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்தே வந்து விசாரணை
மேற்கொண்டார். இதுதொடர்பாக இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.