முக்கியச் செய்திகள் தமிழகம்

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே இருசக்க வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புளியம்பட்டை பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ் (26), செட்டிமண்டபம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (23). இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக நேற்று இரவு கொத்துகோவில் திருமண மண்டபத்திற்கு சென்று விட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அனந்தமங்கலம் பகுதியில் சென்றபோது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காலை அவ்வழியாக சென்றவர்கள் இளைஞர் உயிரிழந்து கிடப்பதை கண்டு திருநீலக்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இரண்டு இளைஞர்களின் சடங்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!

மதுரை கோயில் நிர்வாக இணையதளம் முடக்கம்-பக்தர்கள் அவதி

G SaravanaKumar

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை

EZHILARASAN D