ஜம்மு காஷ்மீரில் லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை துக்சான் கிராம மக்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர், லடாக், போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் போதைப்பொருட்கள் கடத்துவது, ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்துவது போன்ற தீவிரவாத செயல்களிலும், டுருவல் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜம்முகாஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் துக்சான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட பயங்கரவாதிகள் பைசல் அகமது தார் மற்றும் தாலிப் உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
J&K | 2 terrorists of LeT apprehended by villagers of Tuksan, Reasi district, with weapons. 2AK rifles, 7 grenades and a pistol recovered. DGP announces a reward of Rs 2 lakhs for villagers: ADGP Jammu
Apprehended terrorists identified as Faizal Ahmed Dar and Talib Hussain. pic.twitter.com/frBrBrktv5
— ANI (@ANI) July 3, 2022
5 லட்சம் பரிசு
இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், ரியாசி மாவட்டம் துக்சன் கிராமத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்ய உதவிகாரமாக இருந்த துணிச்சலான கிராம மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து ஏடிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், சமீப காலமாக செனாப் பள்ளத்தாக்கு மற்றும் ரஜோரி-பூஞ்ச் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை புத்துயிர் பெற எல்.ஈ.டி என்னும் தீவிரவாத அமைப்பு முயற்சித்து வருகிறது. இவர் அப்பகுதியில் சில தீவிரவாதிகளை மீண்டும் செயல்பட வைத்துள்ளனர்.
உதம்பூர் குண்டுவெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பும், 2வது ரஜோரி மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு, 10 நாட்களுக்கு முன்பு அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் முக்கிய தீவிரவாதி தலிப் ஹுசைன் தலைமறைவாக இருந்தார். நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம். உள்ளூர் கிராம மக்கள் இந்த 2 பயங்கரவாதிகளைப் பிடிக்க எங்களுக்கு உதவினார்கள். அவர்களிடமிருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், 7 கைக்குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகளை பிடிக்க உதவியாக இருந்த கிராம மக்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறினார்.