மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 8.45 மணியளவில் 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலில், அண்டை மாவட்டங்களான நாந்தேட் மற்றும் பர்பானி ஆகியவற்றின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிலநடுக்கம் காரணமாக ஹிங்கோலி மாவட்டத்தின் பாங்ரா ஷிண்டே கிராமத்தில் உள்ள சில வீடுகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக, ஹிங்கோலி மாவட்ட ஆட்சியர் ராகுல் குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த நிலநடுக்கமானது நிலநடுக்கத்தின் மையப்பகுதி, ஹிங்கோலி மாவட்டத்தின் வாஸ்மத் தாலுகாவில் உள்ள ஷிர்லி கிராமத்திற்கு அடியில், தரைமட்டத்திலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.







