+2 மாணவி உயிரியக்க முயற்சி; மாணவிக்கு கவுன்சிலிங்

சேலத்தில் அரசு பள்ளியில் படித்து வந்த +2 மாணவி, மாடியிலிருந்து குதித்து உயிரியக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும்…

சேலத்தில் அரசு பள்ளியில் படித்து வந்த +2 மாணவி, மாடியிலிருந்து குதித்து உயிரியக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் கோகில வாணி என்ற 12-ஆம் வகுப்பு மாணவி காலை வழக்கம் போல் இன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது, காலை பிரேயர் நடந்து கொண்டிருந்தபோது இரண்டாவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். அப்போது மாணவியை உடனடியாக மீட்ட பள்ளி ஆசிரியர்கள் சிறுமிக்கு முதலுதவி செய்து, சிகிச்சைக்காக மாணவியைச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி சேலம் மேச்சேரி அருகே உள்ள அமரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், குடும்பப் பிரச்சினை விவகாரத்தில் பள்ளி கட்டடத்திலிருந்து குதித்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் 12-ஆம் வகுப்பு மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று மாணவியின் உடல் நலம் குறித்து
மருத்துவரிடம் விசாரித்துள்ளார். இதனால், அந்த அரசு பள்ளி மற்றும் மருத்துவமனை முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘’கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், கலவரத்திற்குக் காரணமான அனைவரும் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’ – அமைச்சர் எ.வ.வேலு’

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பள்ளி மாணவியிடம் முழுமையாக விசாரித்துவிட்டதாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாகத் உயிரியக்க முயன்றதாகவும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் காரணமாகத் உயிரியக்க முயலவில்லை என மாணவி தெரிவித்ததாகத் தெரிவித்தார். மேலும், சிறுமிக்குக் கால் முறிவு மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், மாணவிக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் வழங்கி வருவதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.