பிளஸ் 2 பொதுத் தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 சதவீத மாணவர்கள் எழுதவில்லை. இதில், மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதாமல் விடுப்பு எடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு
மாவட்டம் முழுவதும் 74 மையங்களில் நடைபெற்றது. இதில், சுமார் 20 ஆயிரத்து 569
மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில், தமிழ் முதல் தாள் தேர்வில்
மாவட்டத்தில் 2,831 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், 10,239 ஆண் தேர்வர்களில் 9,083 மாணவர்களும், 10,330 பெண் தேர்வர்களில் 8,655
மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மாணவர்கள் 1,156 பேரும், மாணவிகள் 1,675
பேரும் தேர்வு எழுதாமல் விடுப்பு பெற்றுள்ளனர். இதனால், 10% மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா