யாகங்கள் முழங்கச் சிறப்பு பூஜைகளுடன் தென்காசி -நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டத்து.
தென்காசியிலிருந்து நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டத்து. யாகங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர்.
தென்காசி -நெல்லை – திருச்செந்தூர் இடையான ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிக்குத் திட்டமிடப்பட்டுக் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.121 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அந்தப் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டது.
ஆனால், பணி தொடக்கக் காலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பணி தொடங்க கால தாமதமான சூழலில், 2022-ல் முடிக்கப்பட வேண்டிய பணியானது, தற்போது 2023 ஆம் ஆண்டு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று தென்காசி – நெல்லை இடையே முடிவு பெற்ற, மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் சோதனை ஓட்டமானது நடைபெற்றது இந்த சோதனை ஓட்டத்தின் போது, சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலானது இயக்கப்பட்டு சோதனை நடத்த தற்போது, ஓட்டம் தொடங்கியுள்ளது.
புதியதாக அமைக்கப்பட்ட இந்த மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே தலைமை மின் பொறியாளர் சித்தார்த் தொடங்கி வைத்தார்.







