சென்னையில் முன் விரோதம் காரணமாக பெயிண்டர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜீ.ஆர் நகரைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவரது தந்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். காசிவிஸ்வநாதனுக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளது. மனைவிடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ரோட்டோரத்தில் வசித்து வரும் சுந்தர், பரமகுரு என்பவருடன் காசிவிஸ்வநாதன் நண்பராகி அவர்களுடன் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளர்.
மூவருக்குள் கடந்த 6 மாததிற்கு முன் தகராறு ஏற்பட்டது. இதனால் காசிவிஸ்வநாதன் அளித்த புகாரில் சுந்தரையும் பரமகுருவையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, நேற்று விடுதலையான சுந்தர் மற்றும் பரமகுரு காசிவிஸ்வநாதனை காண சென்றுள்ளனர். பின்னர், அவரை குடிக்க வைத்து போதை தலைக்கேறியதும் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







