முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பது குறித்தும், தமிழகத்திற்குக் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் நேற்றைய தினத்தில் முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் இரவு ஊடரங்குக்கான தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இன்று சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காகத் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

Jayapriya

காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற 18 வேட்பாளர்கள் இவர்கள்தான்!

Halley karthi

திறன் இந்தியா திட்டம் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி: பிரதமர் மோடி

Gayathri Venkatesan