திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடியில் வசிப்பவர் சதீஷ்குமார் ( வயது 26). பொள்ளாச்சி சாலையில் உள்ள காபி…

திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடியில் வசிப்பவர் சதீஷ்குமார் ( வயது 26). பொள்ளாச்சி சாலையில் உள்ள காபி பார் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த முனீஸ்வரி ( வயது 19) என்பவருக்கும் கடந்த 2 மாதம் முன்பு திருமணம் நடந்தது.
கணவன், மனைவி இருவரும் சதீஷின் பெற்றோர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று  பிற்பகல் வீட்டில் தனி அறையில் இருந்துள்ளார் சதீஷ். நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ்குமாரின் உயிரிழப்புக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் புது மணமகன்உயிரை மாய்த்துக் கொண்டதால் தாராபுரம் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.