முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டபகலில் அடகு கடை உரிமையாளரிடம் 2 லட்சம் திருட்டு

அடகு கடை உரிமையாளர் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்த இரண்டு லட்சம் பணத்தை பட்டப்பகலில் திருடிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வடக்கு மட வளாகத்தை சேர்ந்தவர் ராகேஷ் குமார். 28 வயதான இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகை அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ 2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகன இருக்கையின் கீழ் வைத்து கொண்டு புறப்பட்டு வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்பொழுது சிறு தூரத்தில் மருந்தகம் அருகே உள்ள கடையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வெளியில் வந்து பார்த்தபோது வாகனத்தின் இருக்கை திறந்து உள்ளே வைத்திருந்த ரூபாய் இரண்டு லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது .

இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் ராகேஷ் குமார் புகார் அளித்தார் .போலீசார் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்த வந்த பணத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பிரதான சாலையில் துணிகரமாக திருடி சென்றது பரபரப்பை, அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாளை டிஸ்சார்ஜ் ஆகிறாரா நடிகர் ரஜினிகாந்த்? மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல்!

Saravana

புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை: முதலமைச்சர் ரங்கசாமி

Web Editor

இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!

Jayapriya