இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் 26 நொடிகள் கொண்ட பாடல் காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிக்கும் 66வது படமான வாரிசு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் அவரின் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியானது. இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கில் இந்த படத்திற்கு வாரசடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. வாரிசு படத்தின் படபிடிப்பு இரண்டு கட்ட படபிடிப்பு நிறைவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படபிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல்வாரிசு திரைப்படத்தின் காட்சிகள், புகைப்படங்கள் அவ்வப்போது டிவிட்டரில் வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் விஜய், சரத்குமார் மற்றும் பிரபு இருக்கும் சில நொடி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் ராஸ்மிகா நடனமாடும் பாடல் காட்சி தற்போது லீக் ஆகி உள்ளது. 26 நொடிகள் உள்ள வீடியோ தற்போது லீக் ஆகி உள்ளது. இதனால் படகுழு அதிர்ச்சி அடைந்துள்ளது.








