ஏழைகளுக்காக 2 கோடி வீடுகள்; பிரதமர் மோடி

பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் கிராமப்புற ஏழைகளுக்காக இரண்டரை கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள…

பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் கிராமப்புற ஏழைகளுக்காக இரண்டரை கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு அளிக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஏழை எளிய மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, முந்தைய ஆட்சியாளர்கள் சில லட்சம் வீடுகளை மட்டுமே ஏழைகளுக்காக கட்டி தந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், தனது தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 8 ஆண்டு காலத்தில் இதுவரை இரண்டரை கோடி வீடுகள் கிராமப்புற ஏழை மக்களுக்காக கட்டித் தரப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதில், சுமார் 2 கோடி வீடுகள், குடும்பத் தலைவிகளின் பெயரில் கட்டித் தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைவருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி எனும் தாரக மந்திரத்துடன், ஏழைகளின் மேம்பாட்டுக்காக பாஜக பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் நேரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.