2017-2021 வரை நீட் தேர்வுக்கு 71 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

2017 முதல் 2021 வரை இந்தியாவில் 71 லட்சம் மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை…

2017 முதல் 2021 வரை இந்தியாவில் 71 லட்சம் மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பாகவும் நாட்டிலுள்ள மொத்த மருத்துவ இடங்கள் தொடர்பாகவும் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 11,38,890 ஆகும் என்று தெரிவித்தார்.

இதேபோல், 2018ம் ஆண்டில் 13,26,725 மாணவர்களும், 2019ம் ஆண்டில் 15,19,375 மாணவர்களும் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 2020ம் ஆண்டில் 15,97435 மாணவர்களும், 2021ம் ஆண்டில் 16,14,777 மாணவர்களும் பதிவுசெய்துள்ளனர். மொத்தமாக கடந்த 2017 முதல் 2021 வரையிலான கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவ பணிப்புக்கான நீட் தேர்வுக்கு 71,97,202 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்று குறிப்பிட்டார்.

தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ள தகவலின் படி இந்தியாவில் 2016-2017ம் ஆண்டில் நாட்டில் 65,183 மருத்துவ இடங்கள் இருந்த நிலையில் 2021-2022 கல்வி ஆண்டில் நாட்டின் மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 89,875 ஆக அதிகரித்துள்ளது என எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.