மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2.55 கோடி பேர் பயன் ; நிதியமைச்சா் தங்கம் தென்னரசு…!

தமிழ் நாடு அரசு மேற்கொண்ட புற்றுநோய் கணடறியும் முகாம் மூலம் மாநிலத்தில் 1,929 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அவர் பேசியதாவது ;

வடசென்னை வளர்ச்சித் திட்டம்

தமிழக அரசின் இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வடசென்னையின் பல பகுதிகளில் சிறப்பான பேருந்து நிலையங்கள், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது என ரூ.6,048 கோடி மதிப்பில் செயல்பட்டு வருகிறது

மருத்துவத் துறையில் தமிழ் நாடு அரசின் சாதனைகள்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். 2.55 கோடி பேர் முதல்முறை சேவைகளையும் 4.75 கோடி பேர் தொடர் சேவைகளையும் பெற்று வருகின்றனர். இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம் 5 லட்சத்துக்கு அதிகமான உயிர்களை காப்பற்றியுள்ளது. இதற்கு இதுவரை ரூ. 493 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 1,206 மருத்துவ முகாம்கள் மூலமாக 17,82,687 பயனாளிகள் பலன்பெற்றுள்ளனர். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 6374 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 87,34,363 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மூலமாக 34,40,550 கோடி மகளிர் பயன்பெற்றுள்ளனர். ரூ. 4,042 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதவரை இதுவரை 21 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் கலந்துகொண்ட 79.17 லட்சம் நபர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதில் 1,929 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர். கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மையம் 398 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.