பேருந்து மீது லாரி மோதல்: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி

சாலையோரத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில், தூங்கிக் கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிகார் மாநிலத்தை தொழிலாளர்கள் சிலர், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பணி யாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில்,…

சாலையோரத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில், தூங்கிக் கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிகார் மாநிலத்தை தொழிலாளர்கள் சிலர், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பணி யாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில், பீகாருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு பேருந்து வந்த போது திடீரென பழுதானது.

அதை சரி செய்ய நேரம் ஆகும் என்று டிரைவர் சொன்னதால், சாலையோரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால், தொழிலாளர்களில் சிலர் பேருந்தின் முன் படுத்துத் தூங்கினர்.

நள்ளிரவில் வேகமாக வந்த லாரி ஒன்று, பேருந்தின் பின்பக்கம் பயங்கரமாக மோதி யது. மோதிய வேகத்தில் பேருந்தின் முன் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த 18 தொழி லாளர்கள், பரிதாபமாக உடல் நசுங்கி பலியாயினர். பலர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.