ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

 

2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கனை பிவி சிந்து மீது இந்த முறை எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்திய பிவி சிந்து, இன்று நடைபெற்ற குரூப் சுற்றின் 2வது போட்டியில் ஹாங்காங்கைச் சேர்ந்த செயுங்கை எதிர்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் செட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து, 21-9  என்ற எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் செயுங் சவால் அளித்தார். இருப்பினும், அவருக்கு தகுந்த பதிலடி அளித்த பிவி சிந்து 21-16  என்ற புள்ளி கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிவி சிந்து, குரூப் சுற்றில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிவி சிந்து தனது அடுத்த போட்டியில் டென்மார்க்கைச் சேர்ந்த மியாவை எதிர்கொள்கிறார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருவொற்றியூரில் களமிறங்கும் சீமான்..

G SaravanaKumar

சூரப்பா மீதான விசாரணை நிறைவு

G SaravanaKumar

தமிழ்நாட்டில் புதிதாக 1,075 பேருக்கு கொரோனா உறுதி

G SaravanaKumar