டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்டனை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் பிரிட்டன் அணி 2 கோல்கள் அடிக்க, இந்திய அணி பதில் கோல் திருப்பியது.
இரண்டாவது பாதியில் பிரிட்டன் அணி மேலும் 2 கோல்கள் அடித்தது. பதில் கோல் திருப்பும் இந்திய அணியின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், 4-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணி, மூன்றிலும் தோல்வியை தழுவியுள்ளது.
https://twitter.com/Media_SAI/status/1420212808570920971
இதே போல், வில்வித்தை தனிநபர் பிரிவு போட்டியில் இந்தியாவின் தருண் தீப் ராய், உக்ரைன் வீரரான ஹன்பின்னை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த சுற்றில் தருண் தீப் ராய், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஷான்னியை எதிர்கொண்டார். இருவரும் சமபலத்துடன் காணப்பட்டதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில், 5-6 என்ற கணக்கில் தருண் தீப் ராய் போராடி தோல்வியடைந்தார்.









