ஆற்றில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்!

பாகிஸ்தானின் ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் நதி அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஸ்வாட் நதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், அந்தச் சுற்றுலாப் பயணிகள் குழுவிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் 18 பேர் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்களது மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளப் பெருக்கில் மாயமானவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.