விரைவு ரயிலில் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல்.. மதுரையில் பரபரப்பு!

மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை ரயில் நிலையத்தில் புருலியா – திருநெல்வேலி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ரயில்வே காவல்துறையினர் சோதனை மேற்க்கொண்டனர். அப்போது, விரைவு ரயிலின் பின்புறத்தில் இணைக்கப்பட்ட பொதுப் பெட்டியில் இரண்டு பேக்குகள் கேட்பாரற்று கிடந்தன. ரயில்வே காவல்துறையினர் அந்த பேக்குகளை சோதனை செய்தனர்.

இதையும் படியுங்கள் : “அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது” – கன்னட மொழி குறித்த பேச்சுக்கு கமல்ஹாசன் விளக்கம்!

அதனை சோதனை செய்த போது அதில் 17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த பொட்டலங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது.

கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டது? யாருக்கு அனுப்பப்பட்டது? என்று மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் இருந்து 17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.