ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பெயரில் போதை தடுப்பு பிரிவு போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன தணிக்கை பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இன்று மதுரை-கொல்லம் நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து வன்னியம்பட்டி வழியாக எஸ். ராமலிங்கபுரம் கிராமத்திற்கு சென்ற காரை சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு காவல் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது மாநிலம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா என சுமார் 150 கிலோ பொருட்கள், 30 பார்சல்களால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறப்பு காவல் படையினர் காரில் அதை எடுத்து வந்த சின்னராமர், முனீஸ்வரன் ஆகியோரை கைது செய்து பிடிப்பட்ட பொருட்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: