கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் பணிகள் தீவிரம்..!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இருப்பதை ஒட்டி சுத்தம் செய்து பள்ளிகளை திறக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகம் முழுவதும் நாளை…

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இருப்பதை ஒட்டி சுத்தம் செய்து பள்ளிகளை திறக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. கோடை
விடுமுறைக்கு பின்பு தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட
உள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட
நிலையில் கோடை வெப்பம் காரணமாக ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர், வரும் ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கும், 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 14ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நாளை  திறக்கப்படுகின்றன. பள்ளிகளை திறக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட
இருப்பதை முன்னிட்டு, பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தி மாணவர்கள் வருகைக்காக தயார் படுத்தும்
பணியில் பள்ளியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பணியாளர்கள் வகுப்பறைகள் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.