6 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் : 110 பயனாளிகளுக்கு வழங்கிய கனிமொழி எம்.பி..!!

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 110 பயனாளிகளுக்கு ரூ6 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி…

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 110 பயனாளிகளுக்கு ரூ6 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த கிழவிபட்டி, கரிசல்குளம், துறையூர் ஆகிய கிராமங்களில்  மக்கள் குறை தீர்ப்பு முகாம்  நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் எம்.பி கனிமொழி கலந்து கொண்டு மக்களிடத்தில் குறைகளைக் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து 110 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் சுய உதவிக்குழு, மூன்று சக்கர வாகனம், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை ரூ 6.91 கோடி மதிப்பீட்டில் வழங்கினார்.

கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.