பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் 5 நாட்களில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் ’வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
#MegaBlockbusterVarisu crosses 150Cr+ collection worldwide in just 5 days nanba 🔥
Aatanayagan 😎#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @Lyricist_Vivek @7screenstudio @TSeries#Varisu #VarisuPongal pic.twitter.com/Qj1vzbuEpa
— Sri Venkateswara Creations (@SVC_official) January 16, 2023
இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மெகா ப்ளாக்பஸ்டர் வாரிசு உலகளவில் வெறும் 5 நாட்களில் 150 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்துள்ளது. ஆட்டநாயகன்!” என்று பதிவிட்டுள்ளது. வாரிசு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், 150 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.