’சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது’ – அமைச்சர் கா.ராமச்சந்திரன்

கடந்த ஆண்டு மட்டும் 11 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததாகவும் அதில் 2 லட்சம் பேர் வெளிநாட்டினர் என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு…

கடந்த ஆண்டு மட்டும் 11 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததாகவும் அதில் 2 லட்சம் பேர் வெளிநாட்டினர் என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை
மகிழ்விக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா, தற்போது நிலவும் கடுமையான குளிரை கருத்தில் கொண்டு மே மாதம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.