முக்கியச் செய்திகள் தமிழகம்

15 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை- சோகத்தில் மாணவர்கள்

2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விடுமுறை நாட்களில் 15 நாட்கள் மட்டுமே விடுமுறையாக இருப்பதால் மாணவர்கள் சோகமடைந்துள்ளனர். 

தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகளுக்கு, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி, 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. 24 அரசு விடுமுறை நாட்களில் 15 நாட்கள் மட்டுமே வார நாட்களில் விடுமுறை வருவதால் மாணவர்கள் சோகமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

EZHILARASAN D

கரூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: செந்தில் பாலாஜி

Halley Karthik

கடைசி ஒருநாள் போட்டி; இந்தியாவுக்கு 100 ரன்கள் இலக்கு

G SaravanaKumar