முக்கியச் செய்திகள் குற்றம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தாத்தா,
சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்‌ஸோ
சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்த தம்பதியின்
13 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். மகளை விட்டு
பெற்றோர்கள் இருவரும் பிரிந்த நிலையில் 13 வயது சிறுமியை அவரது தாத்தாவின்
பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில்
சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் சார்பில் மயிலாப்பூர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரின்
தாத்தா (சிறுமியின் தாத்தா) மூன்று சித்தப்பாக்கள் (தாத்தாவின் மகன்கள்) மற்றும் சித்தப்பாக்களின் மகன்கள் (சிறுமியின் சகோதரர்கள்) இருவர் உட்பட ஆறு பேருக்கு எதிராக மயிலாப்பூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது
செய்தனர்.


இந்த வழக்கு சென்னை போஸ்கோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி
ராஜலட்சுமி முன் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி, குற்றம்
சாட்டப்பட்ட அனைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி
காவல்துறை தரப்பில் நிரூபிக்கபட்டுள்ளது. சிறுமியின் தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்கள் ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம், சிறுமியின் சகோதரர்கள் ஒருவருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், மற்றொருவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பின் தெரிவித்துள்ளார். தீர்ப்பளிக்கபட்ட பின்னர் குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக புழல் சிறையில்
அடைக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு எழுத அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Halley Karthik

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்; மலர்தூவி முதலமைச்சர் மரியாதை

Arivazhagan Chinnasamy

ஜெயலலிதா மரண வழக்கு; சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

G SaravanaKumar